← Articles

Motivational Bible Verses in Tamil

ஊக்கமளிக்கும் வேதவசனங்கள் — தமிழ் & English (NKJV)

A curated list of motivational Bible verses in Tamil — chosen for encouragement, strength, hope, and courage in difficult times. Each verse is shown in Tamil with the matching English (NKJV) translation, and links to the full chapter so you can read it in context.

  1. 1. எரேமியா 29:11 · Jeremiah 29:11

    Read chapter →

    நான் உங்கள்மேல் நினைத்திருக்கிற நினைவுகளை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே; உங்கள் முடிவு நன்மையாயிருக்கும்படிக்கு நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கிற நினைவுகளே.

    For I know the thoughts that I think toward you, says the LORD, thoughts of peace and not of evil, to give you a future and a hope.

  2. 2. பிலிப்பியர் 4:13 · Philippians 4:13

    Read chapter →

    என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

    I can do all things through Christ who strengthens me.

  3. 3. ஏசாயா 41:10 · Isaiah 41:10

    Read chapter →

    நீ பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

    Fear not, for I am with you; be not dismayed, for I am your God. I will strengthen you, yes, I will help you, I will uphold you with My righteous right hand.

  4. 4. யோசுவா 1:9 · Joshua 1:9

    Read chapter →

    பலங்கொண்டு திடமனதாயிரு என்று நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? திகையாதே, கலங்காதே; நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

    Have I not commanded you? Be strong and of good courage; do not be afraid, nor be dismayed, for the LORD your God is with you wherever you go.

  5. 5. சங்கீதம் 23:1 · Psalm 23:1

    Read chapter →

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

    The LORD is my shepherd; I shall not want.

  6. 6. ரோமர் 8:28 · Romans 8:28

    Read chapter →

    அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

    And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose.

  7. 7. 2 தீமோத்தேயு 1:7 · 2 Timothy 1:7

    Read chapter →

    தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

    For God has not given us a spirit of fear, but of power and of love and of a sound mind.

  8. 8. நீதிமொழிகள் 3:5-6 · Proverbs 3:5-6

    Read chapter →

    உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

    Trust in the LORD with all your heart, and lean not on your own understanding; in all your ways acknowledge Him, and He shall direct your paths.

  9. 9. ஏசாயா 40:31 · Isaiah 40:31

    Read chapter →

    கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

    But those who wait on the LORD shall renew their strength; they shall mount up with wings like eagles, they shall run and not be weary, they shall walk and not faint.

  10. 10. சங்கீதம் 46:1 · Psalm 46:1

    Read chapter →

    தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

    God is our refuge and strength, a very present help in trouble.

  11. 11. மத்தேயு 11:28 · Matthew 11:28

    Read chapter →

    வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

    Come to Me, all you who labor and are heavy laden, and I will give you rest.

  12. 12. சங்கீதம் 34:18 · Psalm 34:18

    Read chapter →

    நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

    The LORD is near to those who have a broken heart, and saves such as have a contrite spirit.

  13. 13. உபாகமம் 31:6 · Deuteronomy 31:6

    Read chapter →

    பலங்கொண்டு திடமனதாயிருங்கள், பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடேகூட வருகிறவர்; அவர் உன்னை விட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

    Be strong and of good courage, do not fear nor be afraid of them; for the LORD your God, He is the One who goes with you. He will not leave you nor forsake you.

  14. 14. யோவான் 14:27 · John 14:27

    Read chapter →

    சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

    Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. Let not your heart be troubled, neither let it be afraid.

  15. 15. சங்கீதம் 27:1 · Psalm 27:1

    Read chapter →

    கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமாயிருக்கிறார், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனாயிருக்கிறார், யாருக்கு அஞ்சுவேன்?

    The LORD is my light and my salvation; whom shall I fear? The LORD is the strength of my life; of whom shall I be afraid?

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை readers@thetamilbible.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.|If you have any questions, you can contact us at readers@thetamilbible.in.

Keep going in the Word

Save the verses that speak to you and read the whole Bible in a year with the daily reading plan.