எல்லா தலைப்புகள்

விடுதலை / Deliverance

50 வசனங்கள் — தியானிக்க, ஜெபிக்க, மனனம் செய்ய.

  1. 1-samuel 17:47 · 1-samuel 17:47

    கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

    Then all this assembly shall know that the LORD does not save with sword and spear; for the battle is the LORD’s, and He will give you into our hands.”

  2. 2-samuel 22:2-4 · 2-samuel 22:2-4

    கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே. ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

    And he said: “The LORD is my rock and my fortress and my deliverer; The God of my strength, in whom I will trust; My shield and the horn of my salvation, My stronghold and my refuge; My Savior, You save me from violence. I will call upon the LORD, who is worthy to be praised; So shall I be saved from my enemies.

  3. 2-kings 6:16-17 · 2-kings 6:16-17

    அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

    So he answered, “Do not fear, for those who are with us are more than those who are with them.” And Elisha prayed, and said, “LORD, I pray, open his eyes that he may see.” Then the LORD opened the eyes of the young man, and he saw. And behold, the mountain was full of horses and chariots of fire all around Elisha.

  4. 2-chronicles 20:15 · 2-chronicles 20:15

    சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.

    And he said, “Listen, all you of Judah and you inhabitants of Jerusalem, and you, King Jehoshaphat! Thus says the LORD to you: ‘Do not be afraid nor dismayed because of this great multitude, for the battle is not yours, but God’s.

  5. 2-chronicles 20:17 · 2-chronicles 20:17

    இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.

    You will not need to fight in this battle. Position yourselves, stand still and see the salvation of the LORD, who is with you, O Judah and Jerusalem!’ Do not fear or be dismayed; tomorrow go out against them, for the LORD is with you.”

  6. psalms 18:2 · psalms 18:2

    கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

    The LORD is my rock and my fortress and my deliverer; My God, my strength, in whom I will trust; My shield and the horn of my salvation, my stronghold.

  7. psalms 18:16-19 · psalms 18:16-19

    உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார். அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.

    He sent from above, He took me; He drew me out of many waters. He delivered me from my strong enemy, From those who hated me, For they were too strong for me. They confronted me in the day of my calamity, But the LORD was my support. He also brought me out into a broad place; He delivered me because He delighted in me.

  8. psalms 18:30 · psalms 18:30

    தேவனுடைய வழி உத்தமமானது: கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

    As for God, His way is perfect; The word of the LORD is proven; He is a shield to all who trust in Him.

  9. psalms 27:1-3 · psalms 27:1-3

    கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.

    A Psalm of David. The LORD is my light and my salvation; Whom shall I fear? The LORD is the strength of my life; Of whom shall I be afraid? When the wicked came against me To eat up my flesh, My enemies and foes, They stumbled and fell. Though an army may encamp against me, My heart shall not fear; Though war may rise against me, In this I will be confident.

  10. psalms 31:7-8 · psalms 31:7-8

    உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர். சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

    I will be glad and rejoice in Your mercy, For You have considered my trouble; You have known my soul in adversities, And have not shut me up into the hand of the enemy; You have set my feet in a wide place.

  11. psalms 34:4 · psalms 34:4

    நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

    I sought the LORD, and He heard me, And delivered me from all my fears.

  12. psalms 34:17 · psalms 34:17

    நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

    The righteous cry out, and the LORD hears, And delivers them out of all their troubles.

  13. psalms 34:19 · psalms 34:19

    நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

    Many are the afflictions of the righteous, But the LORD delivers him out of them all.

  14. psalms 40:1-3 · psalms 40:1-3

    கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

    To the Chief Musician. A Psalm of David. I waited patiently for the LORD; And He inclined to me, And heard my cry. He also brought me up out of a horrible pit, Out of the miry clay, And set my feet upon a rock, And established my steps. He has put a new song in my mouth— Praise to our God; Many will see it and fear, And will trust in the LORD.

  15. psalms 50:15 · psalms 50:15

    ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

    Call upon Me in the day of trouble; I will deliver you, and you shall glorify Me.”

  16. psalms 54:7 · psalms 54:7

    அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.

    For He has delivered me out of all trouble; And my eye has seen its desire upon my enemies.

  17. psalms 55:16-18 · psalms 55:16-18

    நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார். திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரே எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

    As for me, I will call upon God, And the LORD shall save me. Evening and morning and at noon I will pray, and cry aloud, And He shall hear my voice. He has redeemed my soul in peace from the battle that was against me, For there were many against me.

  18. psalms 56:3-4 · psalms 56:3-4

    நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

    Whenever I am afraid, I will trust in You. In God (I will praise His word), In God I have put my trust; I will not fear. What can flesh do to me?

  19. psalms 57:1-3 · psalms 57:1-3

    எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்

    To the Chief Musician. Set to “Do Not Destroy.” A Michtam of David when he fled from Saul into the cave. Be merciful to me, O God, be merciful to me! For my soul trusts in You; And in the shadow of Your wings I will make my refuge, Until these calamities have passed by. I will cry out to God Most High, To God who performs all things for me. He shall send from heaven and save me; He reproaches the one who would swallow me up. Selah God shall send forth His mercy and His truth.

  20. psalms 59:16-17 · psalms 59:16-17

    நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

    But I will sing of Your power; Yes, I will sing aloud of Your mercy in the morning; For You have been my defense And refuge in the day of my trouble. To You, O my Strength, I will sing praises; For God is my defense, My God of mercy.

  21. psalms 69:1-2 · psalms 69:1-2

    தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.

    To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David. Save me, O God! For the waters have come up to my neck. I sink in deep mire, Where there is no standing; I have come into deep waters, Where the floods overflow me.

  22. psalms 70:1 · psalms 70:1

    தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

    To the Chief Musician. A Psalm of David. To bring to remembrance. Make haste, O God, to deliver me! Make haste to help me, O LORD!

  23. psalms 91:1-4 · psalms 91:1-4

    உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

    He who dwells in the secret place of the Most High Shall abide under the shadow of the Almighty. I will say of the LORD, “He is my refuge and my fortress; My God, in Him I will trust.” Surely He shall deliver you from the snare of the fowler And from the perilous pestilence. He shall cover you with His feathers, And under His wings you shall take refuge; His truth shall be your shield and buckler.

  24. psalms 91:9-10 · psalms 91:9-10

    எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

    Because you have made the LORD, who is my refuge, Even the Most High, your dwelling place, No evil shall befall you, Nor shall any plague come near your dwelling;

  25. psalms 91:14-16 · psalms 91:14-16

    அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

    “Because he has set his love upon Me, therefore I will deliver him; I will set him on high, because he has known My name. He shall call upon Me, and I will answer him; I will be with him in trouble; I will deliver him and honor him. With long life I will satisfy him, And show him My salvation.”

  26. psalms 107:6 · psalms 107:6

    தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

    Then they cried out to the LORD in their trouble, And He delivered them out of their distresses.

  27. psalms 107:13-14 · psalms 107:13-14

    தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.

    Then they cried out to the LORD in their trouble, And He saved them out of their distresses. He brought them out of darkness and the shadow of death, And broke their chains in pieces.

  28. psalms 116:3-4 · psalms 116:3-4

    மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன். அப்பொது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியுமென்று கெஞ்சினேன்.

    The pains of death surrounded me, And the pangs of Sheol laid hold of me; I found trouble and sorrow. Then I called upon the name of the LORD: “O LORD, I implore You, deliver my soul!”

  29. psalms 118:5-7 · psalms 118:5-7

    நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.

    I called on the LORD in distress; The LORD answered me and set me in a broad place. The LORD is on my side; I will not fear. What can man do to me? The LORD is for me among those who help me; Therefore I shall see my desire on those who hate me.

  30. psalms 121:7-8 · psalms 121:7-8

    கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

    The LORD shall preserve you from all evil; He shall preserve your soul. The LORD shall preserve your going out and your coming in From this time forth, and even forevermore.

  31. psalms 124:7-8 · psalms 124:7-8

    வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.

    Our soul has escaped as a bird from the snare of the fowlers; The snare is broken, and we have escaped. Our help is in the name of the LORD, Who made heaven and earth.

  32. psalms 142:5-7 · psalms 142:5-7

    கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன். என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள். உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

    I cried out to You, O LORD: I said, “You are my refuge, My portion in the land of the living. Attend to my cry, For I am brought very low; Deliver me from my persecutors, For they are stronger than I. Bring my soul out of prison, That I may praise Your name; The righteous shall surround me, For You shall deal bountifully with me.”

  33. psalms 143:9 · psalms 143:9

    கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.

    Deliver me, O LORD, from my enemies; In You I take shelter.

  34. proverbs 18:10 · proverbs 18:10

    கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

    The name of the LORD is a strong tower; The righteous run to it and are safe.

  35. isaiah 43:2 · isaiah 43:2

    நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

    When you pass through the waters, I will be with you; And through the rivers, they shall not overflow you. When you walk through the fire, you shall not be burned, Nor shall the flame scorch you.

  36. jeremiah 1:19 · jeremiah 1:19

    அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    They will fight against you, But they shall not prevail against you. For I am with you,” says the LORD, “to deliver you.”

  37. daniel 3:17-18 · daniel 3:17-18

    நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

    If that is the case, our God whom we serve is able to deliver us from the burning fiery furnace, and He will deliver us from your hand, O king. But if not, let it be known to you, O king, that we do not serve your gods, nor will we worship the gold image which you have set up.”

  38. daniel 6:22 · daniel 6:22

    சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

    My God sent His angel and shut the lions’ mouths, so that they have not hurt me, because I was found innocent before Him; and also, O king, I have done no wrong before you.”

  39. matthew 6:13 · matthew 6:13

    எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

    And do not lead us into temptation, But deliver us from the evil one. For Yours is the kingdom and the power and the glory forever. Amen.

  40. matthew 12:28-29 · matthew 12:28-29

    நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.

    But if I cast out demons by the Spirit of God, surely the kingdom of God has come upon you. Or how can one enter a strong man’s house and plunder his goods, unless he first binds the strong man? And then he will plunder his house.

  41. matthew 17:18 · matthew 17:18

    இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.

    And Jesus rebuked the demon, and it came out of him; and the child was cured from that very hour.

  42. mark 9:25 · mark 9:25

    அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

    When Jesus saw that the people came running together, He rebuked the unclean spirit, saying to it: “Deaf and dumb spirit, I command you, come out of him and enter him no more!”

  43. luke 4:18 · luke 4:18

    கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

    “The Spirit of the LORD is upon Me, Because He has anointed Me To preach the gospel to the poor; He has sent Me to heal the brokenhearted, To proclaim liberty to the captives And recovery of sight to the blind, To set at liberty those who are oppressed;

  44. luke 10:17-20 · luke 10:17-20

    பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

    Then the seventy returned with joy, saying, “Lord, even the demons are subject to us in Your name.” And He said to them, “I saw Satan fall like lightning from heaven. Behold, I give you the authority to trample on serpents and scorpions, and over all the power of the enemy, and nothing shall by any means hurt you. Nevertheless do not rejoice in this, that the spirits are subject to you, but rather rejoice because your names are written in heaven.”

  45. acts 12:5-11 · acts 12:5-11

    அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு. இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான். அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

    Peter was therefore kept in prison, but constant prayer was offered to God for him by the church. And when Herod was about to bring him out, that night Peter was sleeping, bound with two chains between two soldiers; and the guards before the door were keeping the prison. Now behold, an angel of the Lord stood by him, and a light shone in the prison; and he struck Peter on the side and raised him up, saying, “Arise quickly!” And his chains fell off his hands. Then the angel said to him, “Gird yourself and tie on your sandals”; and so he did. And he said to him, “Put on your garment and follow me.” So he went out and followed him, and did not know that what was done by the angel was real, but thought he was seeing a vision. When they were past the first and the second guard posts, they came to the iron gate that leads to the city, which opened to them of its own accord; and they went out and went down one street, and immediately the angel departed from him. And when Peter had come to himself, he said, “Now I know for certain that the Lord has sent His angel, and has delivered me from the hand of Herod and from all the expectation of the Jewish people.”

  46. romans 8:31 · romans 8:31

    இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

    What then shall we say to these things? If God is for us, who can be against us?

  47. 2-corinthians 1:10 · 2-corinthians 1:10

    அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

    who delivered us from so great a death, and does deliver us; in whom we trust that He will still deliver us,

  48. colossians 1:13 · colossians 1:13

    இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

    He has delivered us from the power of darkness and conveyed us into the kingdom of the Son of His love,

  49. 2-timothy 4:18 · 2-timothy 4:18

    கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

    And the Lord will deliver me from every evil work and preserve me for His heavenly kingdom. To Him be glory forever and ever. Amen!

  50. hebrews 2:14-15 · hebrews 2:14-15

    ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

    Inasmuch then as the children have partaken of flesh and blood, He Himself likewise shared in the same, that through death He might destroy him who had the power of death, that is, the devil, and release those who through fear of death were all their lifetime subject to bondage.